Pages

Friday, May 6, 2011

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?


 அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது,முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?

 இது மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்டபிரச்சனையாகும்.

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்து கொள்ள வேண்டியவிஷயமாகும்.

அவன் என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் ஹூவ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அவர்கள்என்று பலரைக் குறிப்பதற்கு ஹூம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிக்கும் போதுமரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...