Pages

Wednesday, May 4, 2011

உங்கள் WINDOWS 7 தமிழில் இயங்க வேண்டுமா?

      விண்டோஸ் இயங்கு தளத்திலும் தமிழ் வந்துவிட்டது. இதற்கான தமிழ் இடைமுகப்பு மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம். 

     http://www.microsoft.com/downloads/details.aspx?familyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta>
  
      விண்டோஸ் 7 இல் நிறுவும்போது எவ்வாறு செயல்படுவது என வழிகாட்டிடும். திரையின் கட்டளையை பின்பற்றுங்கள். இறுதியாக கணினியின் இயக்கம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். அப்போது வழக்கமான திரையில் நல்வரவு என்று நம்மை தமிழன்னை வரவேற்பாள். 

        தமிழிலிருந்து மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற விரும்பினால் Start=>Control Panel > Regional and Language என்றவாறு கட்டளைகளை செயல்படுத்திய பின்னர் தோன்றும் திரையில் தேவையான வாய்ப்பினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கேமராவில் எடுத்த படங்களுக்கு ஒட்டுமொத்தமாக பெயர் மாற்ற

    கேமராவின் நினைவகத்தில் பதியப்பட்டுள்ள ஒளிப்படங்களை கணினியின் ஹார்டிஸ்கில் பதிவு செய்த பிறகு, நாமே அந்த கோப்புகளின் பெயரை மாற்றுவோம். இவ்வாறு மாற்றாவிடில் தேவைப்படும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எடுக்கப்பட்ட படத்தை தேடிக்கண்டு பிடிப்பது கடினமாக இருக்கும். 
       ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பெயர் மாற்றுவதும் கடினமே. ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது இடத்தில அல்லது பகுதியில் எடுத்த அனைத்து ஒளிப்படங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே பெயரை வைத்து விடுவது சிறந்தது. 

முன்னுரை

 அன்புடையோரே வணக்கம். இது என்னுடைய முதல் பதிவு. உங்கள் குழுவுக்குள் என்னையும் ஐக்கியமாக்கிட, எனக்கும் தங்களுடைய முழு ஆதரவையும் வழங்கிட ...

Related Posts Plugin for WordPress, Blogger...