Pages

Wednesday, May 11, 2011

ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?


32 வயதுப் பெண்மணி ஒருவர் கூறுகையில், `நான் தாம்பத்ய தொடர்பை அதிகம் விரும்புபவள் தான். ஆனால் 12 மணி நேர தொடர்வேலையால் சோர்ந்து போகிறேன். மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது. கணவரும் கூட என்னைப் போலவே நீண்ட நேரம் பணி செய்கிறார். அதனால் 30 வயதுக்குப் பிறகு அதன் மீதான எதிர்பார்ப்பு குறையத் தொடங்கியது. அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் எங்கள் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது’ என்றார்.


சர்வேயின்போது ஒரு இளம் குடும்பத்தலைவியின் ஏக்கம் நிறைந்த பதில் இது. “நாங்கள் இருவரும் கடைசியாக எப்போது உறவு வைத்துக்கொண்டோம் என்பதே நினைவில் இல்லை. அந்த அளவிற்கு நாங்கள் உறவு கொண்டு வெகுகாலம் ஆகிவிட்டது”
இதுபற்றி டாக்டர் ஷா கூறுகையில், `30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் இவர் மாதிரியான பெண்களின் வேதனைக்கு காரணம்’ என்கிறார்.
இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள். பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்சில் ஆர்வம் குறைந்து விடுகிறது.
40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.
43 வயது குடும்பத் தலைவி ஒருவர் டாக்டரின் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார். `நான் 20-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைக்கும் இடையே ஒரு தறி `நாடா’ போல ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் செக்ஸ் உணர்வுகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை’ என்றார்.
எந்த வயதில் செக்ஸ் உணர்வுகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
30 வயதில்
இந்த வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். தனிமையில் இருந்தால் இந்த வயதில் திருமண ஆசை உச்சத்துக்குச் செல்லும். இணக்கமான நபரை தேட வைக்கும். திருமணமாகி குழந்தைகள் இருந்தால் குழந்தைகளைக் கவனிப்பது, பராமரிப்பது, குடும்ப நிர்வாகம் போன்ற அனுதின பிரச்சினைகள் அவர்களது செக்ஸ் ஆர்வத்தில் தளர்வை ஏற்படுத்தக்கூடும்.
இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரித்தல், புகை, போதை, மது போன்ற பழக்கங்களின் பின்விளைவுகளாக வியாதிகள் தொற்றுவது போன்ற தொல்லைகளும் தொடங்கிவிடுகிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.
40 வயதில்
இந்த வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.
இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் `செட்’டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
50 வயதில்
பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம்.
ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது. அரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது.
30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை இப்படித்தான் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...