Pages

Wednesday, May 11, 2011

வந்து விட்டது “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு


உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும்; நீங்களும் அதை இயக்கலாம்; இன்டர்நெட் பார்க்கலாம்; இ-மெயிலும் தரலாம்.என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிறீர்களா? ஆம்,கையடக்க… இல்லையில்லை; உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில், “ஸ்டிக்கர்’ வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, “ஸ்கின்புட்’ என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு, லேப்-டாப், கம்ப் யூட்டர், மொபைல், ஐபாட் ஆகியவற்றை இயக்க முடியும்.

மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும்.முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, “சிப்’பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும்; என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங் களில் பொருத்தப் பட்டுள்ள சென் சார்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கருவி, 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...