விண்டோஸ் இயங்கு தளத்திலும் தமிழ் வந்துவிட்டது. இதற்கான தமிழ் இடைமுகப்பு மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.
http://www.microsoft.com/downloads/details.aspx?familyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta>
விண்டோஸ் 7 இல் நிறுவும்போது எவ்வாறு செயல்படுவது என வழிகாட்டிடும். திரையின் கட்டளையை பின்பற்றுங்கள். இறுதியாக கணினியின் இயக்கம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். அப்போது வழக்கமான திரையில் நல்வரவு என்று நம்மை தமிழன்னை வரவேற்பாள்.
தமிழிலிருந்து மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற விரும்பினால் Start=>Control Panel > Regional and Language என்றவாறு கட்டளைகளை செயல்படுத்திய பின்னர் தோன்றும் திரையில் தேவையான வாய்ப்பினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அவ்வாறு மொழியை தமிழில் மாற்றிய பிறகு குரோம் பயன்படுத்துபவராக இருந்தால் ஜிமெயில் FACEBOOK போன்றே திரைத்தோற்றம் தமிழில் அமைகிறது.
விண்டோசில் இந்த வசதியை நிறுவுவதற்கு முன் விண்டோஸ் ஒரிஜினலா போலியா என்று சரிபார்ப்பு செய்கின்றனர். அதன்பின்னரே தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கின்றனர். எனவே அனுமதியின்றி நகலெடுத்து வைத்திருப்பவர்கள் இதை நிறுவுவதற்கு முயற்சி செய்ய வேண்டாம்.
மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே
//மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம்//
ReplyDeleteதரவிறக்க லிங்க் ஏதாவது இருக்கா. மன்னிக்கவும். இப்படி மொட்டையாக எழுதினால் எங்கே போய் தேடுவது.
மன்னிக்கவும். டைப் செய்தேன். ஆனால் எப்படியோ தவறிவிட்டது. சரிசெய்துகொண்டேன்.
ReplyDelete