Pages

Saturday, May 7, 2011

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்


ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம்
இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,
அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்
••
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு பணியில் சிவில் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு மசோதா வரைவு பணியில் முற்றிலும் அரசு அதிகாரிகள் மட்டும் இடம் பெறாமல், சாமான்ய மக்கள் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் 50 விழுக்காடு இடம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

சார் ஒன் மினிட்

*  Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப் படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரவுட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்
.


GSM Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile) : இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங் களுடன் இணைத்துக் கொள்ள முடியும். அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப் படுகின்றன.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 

இன்ட்லியில் பிரபலமாவதற்கு எட்டு கட்டளைகள்

  1. முதலில் உங்கள் இடுகைகளை இன்ட்லியில் சமர்ப்பிக்க வேண்டும். 
  2. வேறொருவரின் இடுகைகளை கண்டிப்பாக காப்பி பேஸ்ட் செய்யாதீர்கள். 
  3. ஒவ்வொரு இடுகைகளுக்கும் பொருத்தமான தலைப்பு கொடுக்க வேண்டும் .
  4. அந்தந்த செய்திகளுக்கேற்ற பிரிவில் தான் இடுகைகளை சமர்பிக்க வேண்டும். 
  5. புதிய செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
  6. நல்ல இடுகைகளுக்கு தன்னலம் பாராமல் ஓட்டளிக்க வேண்டும். 
  7. உங்களுக்கு பிடித்த இடுகைகளுக்கு பின்னூட்டம் எழுதிப்பழகுங்கள். 
  8. நல்ல செய்திகளை மட்டுமே சமர்ப்பியுங்கள்.

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

உங்கள் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? 

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். 

நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச்செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டேஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும்என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்றுநினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத்தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! 

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும்,மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. 

எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும்உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது. 

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச்சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. 

கேட்பது என்பது காது கொடுப்பது மட்டும் இல்லை.

எல்லோருமே மனம் நிரம்பி வழியும் கவலைகளோடு உலாவுகிறோம். யாராவது நம்மைக் காது கொடுத்து கேட்டாலே மனது திறந்து விடுகிறது. இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர் கூடப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்று சொல்லும் நேரங்களில் எல்லாம் நாம்தான் அதிகம் பேசியிருப்போம். எதிராளி கேட்டுக் கொண்டிருந்திருப்பார்.




கேட்பது என்பது காது கொடுப்பது மட்டும் இல்லை.

பேசுபவரின் பொருளில் மனதை ஊன்றிக் கொள்ள வேண்டும். அவரது அனுபவத்தில் நாமும் மூழ்கிப் போய் அவரது உணர்வுகளை அனுபவிக்க வேண்டும். பொதுவாக ஒருவர் பேச ஆரம்பித்ததுமே, நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதிலேயே மூழ்கியிருக்கிறோமே ஒழிய அவரது பேச்சில் கவனம் இருப்பதில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...