40 லட்சம் வருடங்களுக்கு முன்தான் ஆப்ரிக்க சமவெளியில் காதல் பிறந்தது. அப்போது தான் முதல் மூளையில் ந்யூரோ கெமிக்கல் மனித ரத்தத்தில் பாய்ந்து, காதலின் காரணத்தால் அசட்டு சிரிப்பும் வியர்வையும் ஏற்பட்டது.
காதல் என்பது குழப்பமான ஓர் உணர்வு. கோபம், பயம் போன்றவற்றை விஞ்ஞான கருவிகளால் அளக்க முடியும். ஆனால் காதல்???
அதன் அடையாளங்கள் குழப்பமானவை. அஜீரணமாக இருக்கலாம். பைத்தியமாக இருக்கலாம். காதலுக்கென்று தனிப்பட்ட அடையாளங்கள் தேடுவது குழப்பமாக இருந்தது.
காதலிக்கும்போது, கன்னம் கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போது மூளையிலிருந்து amphetamines , Dopamine , norepinephrine , குறிப்பாக phenylethylamine , போன்ற ரசாயன பொருட்கள் ரத்தத்தில் பாய்கின்றன. காதலும் பதற்றமும் ஒன்று போல் அறிந்தனர். காரணம் இரண்டு உணர்வுகளின் போதும் இந்த கெமிக்கல் தான் ரத்தத்தில் கலக்கின்றன.
காதல் என்பது இயற்கை தரும் போதை. போக போக இந்த ethylamines பழகிப்போக, ஒரு வாரத்திற்குப்பின் காதலியை தொட்டால் மட்டும் போதாது. கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது. படுக்கை அருகே செல்ல வேண்டியிருக்கிறது. இவை எல்லாம் சுலபமாக கிடைத்துவிட்டால் வேறு நபரிடம் காதல் செய்வதால் தான் இந்த கெமிக்கல்கள் மீண்டும் சுரக்கிறது. இருந்தும் பல காதல்கள் வருடக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம் வேறு வகை கெமிக்கல்ஸ்.
மூளையில் ENDORPHIN என்றொரு மற்றொரு கெமிக்கல் சுரந்து காதலை நீட்டிக்க வைக்கிறது.
OXYTOCIN என்னும் பொருள் கூட காதலுக்கு காரணம். நரம்பை நிரடி தசைகளை சுருக்குகிறது. பெண்களிடம் இதே கெமிக்கல் தான் யூட்டிரஸ் சுருங்கவும், முலைப்பால் சுரக்கவும், காதலனைக் கொஞ்சவும் பயன்படுகிறது.
ஆண் பெண் சேர்க்கையின்போது இருவர் உடலிலும் OXYTOCIN அளவு 3 முதல் 5 சதவீதம் அதிகரிக்கிறது. கடைசி கட்ட வாண வேடிக்கைக்கேல்லாம் காரணம் இதே OXYTOCIN தான்.
மேற்கத்திய நாகரீகத்தில் நான்கு வருடத்திற்குப்பின் தான் இல்வாழ்வில் முதல் அலுப்புகள் தோன்றுகின்றன. திருமணமாகி நான்கு வருடத்தை நெருங்குபவர்கள் குழந்தை பெற்று கொள்ளலாம். இன்னும் நான்கு ஆண்டுகள் காதல் தாங்கும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதும் மொத்தத்தில் 5 சதவீதம் ஜீவராசிக்குதான். மனிதர்கள் பொதுவாக ஒருத்தி, சிலவேளை மற்றொருத்தி என்ற கொள்கையைத்தான் கடை பிடிக்கிறார்கள். இந்த ''சிலவேளை'' மற்றொருத்திக்கு காரணம் ஜீன்களின் புதிய சேர்க்கைகளை முயன்றுபார்த்து அடுத்த தலைமுறைக்கு சிறப்பான தலைமுறைகளை உண்டாக்கும் தேவைதான்.
HOMOSEX - க்கு ஆதார காரணம் காதல்தான் என்றாலும் பிறப்பின் போது ஏற்பட்ட சில BIOCHEMICAL TROUBLE தான் காரணம்.
இயற்கை நம்மை ஒருவகையான நபருக்குத்தான் தயார் செய்து வைத்திருக்கிறது. நம் ஒவ்வொருவர் மனதின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக நாயகி இருக்கிறார்கள். தனிப்பட்ட காதல் வரைபடம். (PERSONAL ROMANTIC NEUROGRAPH) இந்த உருவம் ஆரம்ப காலத்தில் நம் அடிமனதில் உருவாகிறது.
மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே
No comments:
Post a Comment