ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு
அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி
ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மறந்து போய்விடுவதுண்டு.
ஆரம்ப
காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு
,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது
,வருவாய்க்கான வழி இல்லாததது என எத்தனையோ காரணங்களை இதற்கு கூறலாம்.
எது
எப்படியோ வலைப்பதிவு என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டேன் என்று
புலம்பித்தவிக்கும் நிலைக்கு பல பதிவர்கள் ஆளாவதுண்டு.சிலருக்கு இது குற்ற உணர்வை
கூட ஏற்படுத்தலாம்.
வலைப்பதிவு
என்றில்லை;குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்துபவர்களும் தங்கள் கணக்கை
மறந்து மாதக்கணக்கில் புதிய பதிவு எதனையுமே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும்
உண்டு.
தொழில்நுட்ப
யுகம் சமுக வலைப்பின்னல் சேவைகள் முலமாக பகிர்வதை சுலபமாக்கியிருக்கும் அதே
நேரத்தில் இத்தகைய மன உறுத்தல்களுக்கும் ஆளாக்கி விடுகிறது.
அடிக்கடி பதிவிட தவறும் வலைப்பதிவாளர்களை இடித்து காட்டுவது அல்ல இந்த பதிவின்
நோக்கம்.மாறாக வலைப்பதிவு மறதிக்கான காரணம் எதுவாக இருக்குமானாலும் அதிலிருந்து
விடுபடுவதற்கான தீர்வு தரும் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்வதே ஆகும்.
கீப்
ஆன் போஸ்டிங் என்னும் அந்த தளம் வலப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவுனை ஒரேடியாக
மறந்துவிடாமல் இருப்பதகான நினைவூட்டல் சேவையை வழங்குகிறது.அதாவது குறிப்பிட்ட
காலத்திற்கு மேல நீங்கள் புதிய பதிவிடாமல் இருக்கும் போது இந்த சேவை அது குறித்து
உங்களுக்கு நினைவூட்டி பதிவிடச்சொல்கிறது.
இதே
போல டிவிட்டர் குறும்பதிவு சேவையை பயன்படுத்துபவர்களும் புதிய 140 எழுத்து
பதிவுகளை வெளியிடாமல் இருந்தால் இந்த சேவை இமெயில் வாயிலாக நினைவூட்டும்.
சுறுசுறுப்பான
வலைபதிவாளராக இருக்க விரும்புகிறவர்கல் இந்த சேவையை பயன்படுத்தினால் தொடர்ந்து
வலைப்பதிவை புதுப்பித்து கொண்டே இருக்கலாம்.உற்ற நண்பனைப்போல இந்த சேவை நீங்கள்
பதிவிட்டு நாளாச்சு என நினைவுபடுத்தி உங்களை ஊக்கப்படுத்தும்.
இணையத்தில்
எத்தனையோ வகையான நினைவூட்டல் சேவைகள் இருக்கின்றன.அவற்றில் வலைப்பதிவாளர்களுக்கான
நினைவூட்டல் சேவையாக கீ ஆன் போஸ்டிங் அமைந்துள்ளது.
வலைப்பதிவு
அல்லது டிவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்கள் அவற்றை மறந்துபோய்விடும் பழக்கமும்
கொண்டிருந்தால் இந்த சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.
தமிழில்
பல நல்ல வலைப்பதிவுகள் தொடர்ட்ந்து புதுப்பிக்கப்பட்டாததை பார்த்து
வருந்தியிருக்கிறேன்.அத்தகைய பதிவுகள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க இந்த சேவை
கைகொடுக்கட்டுமே.
இணையதள
முகவரி;http://keeponposting.com/
மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே
மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே
NALLA THAGAVAL PAGIRVUKKU NANRI
ReplyDeleteCopy Paste from Cybersimman . சொந்தமா நல்லாத்தான எழுதுறீங்க. அப்புறம் எதுக்கு எழுதியவருக்கு மரியாதை கொடுக்காமல் காப்பி அடிக்கும் வேலை.?
ReplyDeleteஎப்படி கூறுகிறீர்கள்?
ReplyDeleteதகவளுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteநண்பரே..
ReplyDeleteஇந்த இருக்கு ஒரிஜினல் பதிவுக்கான லிங்க் https://cybersimman.wordpress.com/2011/04/15/blog-5/
சொந்தமாக எழுதவும்.