Pages

Monday, May 9, 2011

காலை நேர 'பசி

வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், ஜன்னலைத் திறக்கும்போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பரவசமான நிலையில் உங்களது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், லேசாக திறந்தபடி காணப்படும் வாய், உடைகள் கலைந்து போயிருக்கும் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு வைத்துக் கொண்டால் என்ன என்பதுதான்.

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பசி' உணர்வு எழுவது சகஜம். அதேசமயம், பெண்களுக்கு அந்த உறவில் பெரும்பாலும் நாட்டம் ஏற்படுவதில்லை.

செக்ஸ் விஷயத்தில், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உறவு கொள்வது என்பதில் தனித் தனி கருத்துக்கள் இருக்கின்றன. 

பெண்களைப் பொறுத்தவரை இரவு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -பெரும்பாலும். ஆண்களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரும்புகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமானது என்பதை விட உடல் ரீதியான ஒரு தேவையாகவே பெரும்பாலும் உள்ளது. எப்போதெல்லாம் ஆண்களின் உடலும், மனமும் நிதானமாக, ரிலாக்ஸ்டாக இருக்கிறதோ அப்போதெல்லாம் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுகிறது. அதிலும் துணை வெகு அருகே இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் வேகமாகவே தூண்டப்படும். இதுதான் காலையில் எழுந்திருத்ததும் அவர்களுக்குப் 'பசி' எடுக்க முக்கியக் காரணம்.

ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமாகவே தூண்டப்படுகிறது. தனது துணையைப் பார்த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில்லை. மாறாக உணர்வுகள் தூண்டப்பட்டால் மட்டுமே அவர்கள் 'சாப்பிடத்' தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம்.

சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம்?

இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை பார்க்கிறார்கள், பிசியாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்களை விட பெண்களுக்குத்தான் இன்று நிறைய சுமைகள். குடும்பத்தைக் கவனிப்பது, வேலைக்குச் செல்வது, வீட்டு வேலைகளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென்மையான தோள்களில் சுமத்தி விட்டது சமுதாயம். 

எனவே பெண்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு, மன ரீதியான டென்ஷன் அதிகமாகி விட்டது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை குறித்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டிருக்கிறது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது. 

இப்படிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவர்கள் பெரும் மெனக்கெட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவு கொள்வது என்பதை அவர்கள் கிட்டத்தட்ட வெறுக்கவே செய்கிறார்கள்.

இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்தவரை காலையில் உறவு கொண்டு மனதையும், உடலையும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைகளையும், சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. 

அதை விட முக்கியமாக, ஆண்களுக்கு வேலை என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. காலையில் எழுந்திருத்து, குளித்து, சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையில் மீண்டும் திரும்பி விடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும்போது உறவு வைத்துக் கொள்வதில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக் கூடும்.

ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல் நேர சவால்களையும், வேலைகளையும் எப்போதும் போலவே அவர்கள் எதிர்கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவர்கள் நினைப்பதில்லை. சவால்கள் எப்போதுமே ஒன்றுதான் அதை எதிர்கொள்ள மன ரீதியான, புத்தி ரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தேவையில்லை என்பது அவர்களது சிந்தனை. 

மேலும், ஒரு வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தால், காலையில் எழுந்தது முதல் அலுவலகத்திற்குச் செல்வது வரை ஏகப்பட்ட வேலைகள் வரிசை கட்டிக் காத்திருக்கும். சமையல் செய்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவரை வேலைக்கு அனுப்புவது, தானும் வேலைக்குச் செல்லத் தயாராவது, வீட்டில் பெரியவர்கள் இருந்து விட்டால் அவர்களைக் கவனிப்பது என்று உட்காரக் கூட நேரம் இல்லாமல் ஓட வேண்டிய கட்டாயம் இன்றைய பெண்கள் பெரும்பாலானோருக்கு உள்ளது.

இன்றைய சமுதாயத்தில் மனைவியருக்கு உதவும் கணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக் கூட மனைவியைத் தேடுவோர் நிறையப் பேர் உண்டு. இப்படிப்பட்ட பிசியான ஷெட்யூலில் காலையில் எங்கே போய் உறவு கொள்வது? இதுதான் பெண்கள் காலை நேர 'சடுகுடு'வை விரும்பாததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல 'ஐடியா'தான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் பிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.

காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டில் ஒரு சின்ன 'இச்', காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவியை எழுப்பிப் பாருங்கள், செக்ஸ் உறவை விட அது ஆழமாக அவரது மனதைத் தொடும்.

உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா...?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...