Pages

Saturday, May 7, 2011

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

உங்கள் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? 

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும். 

நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழி நடத்திச்செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டேஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழி நடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும்என்று வைத்துக் கொண்டால் கூட மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இழக்க நேரிடும் என்றுநினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத்தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்! 

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும்,மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன. 

எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும்உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது. 

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச்சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது. 

கேட்பது என்பது காது கொடுப்பது மட்டும் இல்லை.

எல்லோருமே மனம் நிரம்பி வழியும் கவலைகளோடு உலாவுகிறோம். யாராவது நம்மைக் காது கொடுத்து கேட்டாலே மனது திறந்து விடுகிறது. இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர் கூடப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்று சொல்லும் நேரங்களில் எல்லாம் நாம்தான் அதிகம் பேசியிருப்போம். எதிராளி கேட்டுக் கொண்டிருந்திருப்பார்.




கேட்பது என்பது காது கொடுப்பது மட்டும் இல்லை.

பேசுபவரின் பொருளில் மனதை ஊன்றிக் கொள்ள வேண்டும். அவரது அனுபவத்தில் நாமும் மூழ்கிப் போய் அவரது உணர்வுகளை அனுபவிக்க வேண்டும். பொதுவாக ஒருவர் பேச ஆரம்பித்ததுமே, நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதிலேயே மூழ்கியிருக்கிறோமே ஒழிய அவரது பேச்சில் கவனம் இருப்பதில்லை.

Friday, May 6, 2011

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?


 அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறை வான வார்த்தையாகக் கருதப்படுகிற போது,முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?

 இது மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்டபிரச்சனையாகும்.

இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதல் அறிந்து கொள்ள வேண்டியவிஷயமாகும்.

அவன் என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் ஹூவ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அவர்கள்என்று பலரைக் குறிப்பதற்கு ஹூம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிக்கும் போதுமரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.

Thursday, May 5, 2011

இவர்களின் திருமணச்செலவு 22 கோடியே 45 லட்சம் மட்டுமே.

ஜூனியர் என்.டி.ஆர்- லட்சுமி பிரணதி திருமணம் இன்று தொடங்குகிறது. நாளை அதிகாலை 2.41 மணிக்கு ஜூனியர் என்டிஆர் மணமகளுக்கு தாலி கட்டுகிறார். கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் அமர்க்களமாக நடந்து வந்தன.


ஹைதராபாத் அருகே உள்ள மாதாபூரில் திருமணப் பந்தல் போடப்பட்டு உள்ளது. ரூ.5 கோடி செலவில் பிரத்யேகமாக திருமண மண்டபமும் கட்டப்பட்டு உள்ளது. பந்தலை சுற்றிலும் அலங்கார வேலைப்பாடுகளுடன் சிலைகள், நீர்வீழ்ச்சிகள், அரண்மனை வாயில்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. 

யூ ட்யூப் வீடியோ புள்ளி புள்ளியாக சுற்றுகிறதா? கவலையை விடுங்க...

    நீங்கள் யூ ட்யூபில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில் படம் விட்டு விட்டு தெரியும். இந்த பிரச்சினையை சமாளிக்க அதிலேயே ஒரு ஆப்ஷன் இருக்கிறது. 

       இது அனைவருக்கும் தெரியும் என்றாலும் தெரியாதவர்களுக்காக..

       மொதல்ல  யூ ட்யூப் தளத்த தொறந்துகிடுங்க





  signin பண்ணி உள்ள  போங்க. (உங்களுக்கு அக்கௌன்ட் இல்லேன்னா  ஒரு அக்கௌன்ட் க்ரியேட் செய்தா போச்சு )
Related Posts Plugin for WordPress, Blogger...