Pages

Monday, May 9, 2011

போதை மருந்தை விட இன்டர்நெட் ஆபத்து


எப்போதும் கம்ப்யூட்டர் கேம், இன்டர்நெட் என்று கம்ப்யூட்டரே கதியா?சாப்பாட்டை மறந்து விட்டு கம்ப்யூட்டரில் மூழ்கி விடுகினரா எப்போதும்?கம்ப்யூட்டரில் விளையாடி விட்டு அடிக்கடி கோபப்படுகின்றனரா? இப்படியெல்லாம் உங்கள் குழந்தைகள் செய்தால், மனோதத்துவ டாக்டரை பார்க்க இது சரியான தருணம்; இனியும் தாமதிக்கக்கூடாது! 

இது குறித்து, அமெரிக்க மனோதத்துவ ஆய்வு இதழில் நிபுணர்கள் கூறியிருப்பதாவது: மது குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவதை விட, இன்டர்நெட், கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது மோசமானது; கம்ப்யூட்டரே கதி என்று இருப்போர் அதற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.

இப்படி இருப்பதால் அவர்களால் சரிவர சிந்திக்க முடிவதில்லை; சரியான நேரத்துக்கு சாப்பிட முடிவதில்லை; சரியான தூக்கம் இல்லை. அவர்கள் மனநிலையும் மாறுகிறது. கோபம் அதிகரிக்கிறது கம்ப்யூட்டர் கேம்கள் பெரும்பாலும் அசகாயசூரத்தனமானவை; கோபம், ஆத்திரம், பராக்கிரமம் போன்றவற்றை காட்டும் கேரக்டர்களை கொண்ட டிஜிட்டல் விளையாட்டுகள். அவற்றை விளையாடும் குழந்தைகள், மனதில் அமைதியான சுபாவம் மாறி விடுகிறது. பெற்றோர் சொல்வதை கேட்கும் பண்பு மறைகிறது. அடிக்கடி கோபப்படுவது சகஜமாகிறது. அது தான் சரி என்று நினைக்கும் அளவுக்கு மாறிவிடுகின்றனர்.

சிறுவயதில் இருந்தே, கம்ப்யூட்டருக்கு அடிமையாகி விட்டவர்கள், பெரியவர்களாகும் போது, பெரும் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். கம்ப்யூட்டருக்கு அடிமையானவர்கள், திருமணம் செய்த பின் மனைவி யுடன் சரிவர குடும்பம் நடத்த முடியாமல், படுக்கை அறையிலும் “லேப் டாப்’ கம்ப்யூட்டரே கதியாக இருக்கின்றனர்.

கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில், எவ்வளவோ அறிவுப்பூர்வமான விஷயங்கள் உள்ளன; அதே அளவுக்கு தீய விஷயங்களும் உள்ளன. ஆபாச படங்களை பார்க்க ஆரம்பித்த ஒருவர் நாளடைவில் செக்ஸ் விஷயங் களில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். போகப்போக அவர்கள் உண்மையான நிலைக்கு வர முடியாமல் இன்டர்நெட்டில் செக்ஸ் படங்கள் பார்ப்பதில் அடிமையாகி விடுகிறார்.

இது போன்று பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் சிறுவயதில் காட்டிய கம்ப்யூட்டர் வெறித்தனம் தான். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Sunday, May 8, 2011

காதல் பற்றி என்னுடைய கருத்து.

      40 லட்சம் வருடங்களுக்கு முன்தான் ஆப்ரிக்க சமவெளியில் காதல் பிறந்தது. அப்போது தான் முதல் மூளையில் ந்யூரோ கெமிக்கல் மனித ரத்தத்தில் பாய்ந்து, காதலின் காரணத்தால் அசட்டு சிரிப்பும் வியர்வையும் ஏற்பட்டது.
              காதல் என்பது குழப்பமான ஓர் உணர்வு. கோபம், பயம் போன்றவற்றை விஞ்ஞான கருவிகளால் அளக்க முடியும். ஆனால் காதல்???

      அதன் அடையாளங்கள் குழப்பமானவை. அஜீரணமாக இருக்கலாம். பைத்தியமாக இருக்கலாம். காதலுக்கென்று தனிப்பட்ட அடையாளங்கள் தேடுவது குழப்பமாக இருந்தது.

         காதலிக்கும்போது, கன்னம் கன்னம் தொடும்போது, கையும் கையும் படும்போது மூளையிலிருந்து amphetamines , Dopamine , norepinephrine , குறிப்பாக phenylethylamine , போன்ற ரசாயன பொருட்கள் ரத்தத்தில் பாய்கின்றன. காதலும் பதற்றமும் ஒன்று  போல் அறிந்தனர். காரணம் இரண்டு உணர்வுகளின் போதும் இந்த கெமிக்கல் தான் ரத்தத்தில் கலக்கின்றன.

         காதல் என்பது இயற்கை தரும் போதை. போக போக இந்த ethylamines பழகிப்போக,  ஒரு வாரத்திற்குப்பின் காதலியை தொட்டால் மட்டும் போதாது. கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது. கடைக்கண் பார்வை மட்டும் போதாது. படுக்கை அருகே செல்ல வேண்டியிருக்கிறது. இவை எல்லாம் சுலபமாக கிடைத்துவிட்டால் வேறு நபரிடம் காதல் செய்வதால் தான் இந்த கெமிக்கல்கள் மீண்டும் சுரக்கிறது. இருந்தும்  பல காதல்கள் வருடக்கணக்கில் நீடிக்கின்றன. காரணம் வேறு வகை கெமிக்கல்ஸ்.

         மூளையில் ENDORPHIN என்றொரு மற்றொரு கெமிக்கல் சுரந்து காதலை நீட்டிக்க வைக்கிறது.

        OXYTOCIN என்னும் பொருள் கூட காதலுக்கு காரணம். நரம்பை நிரடி தசைகளை சுருக்குகிறது. பெண்களிடம் இதே கெமிக்கல் தான் யூட்டிரஸ் சுருங்கவும், முலைப்பால் சுரக்கவும், காதலனைக் கொஞ்சவும் பயன்படுகிறது.

        ஆண் பெண் சேர்க்கையின்போது இருவர் உடலிலும் OXYTOCIN அளவு 3 முதல் 5 சதவீதம் அதிகரிக்கிறது. கடைசி கட்ட வாண வேடிக்கைக்கேல்லாம் காரணம் இதே OXYTOCIN தான்.

        மேற்கத்திய நாகரீகத்தில் நான்கு வருடத்திற்குப்பின் தான் இல்வாழ்வில் முதல் அலுப்புகள் தோன்றுகின்றன. திருமணமாகி நான்கு வருடத்தை நெருங்குபவர்கள் குழந்தை பெற்று கொள்ளலாம். இன்னும் நான்கு ஆண்டுகள் காதல் தாங்கும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதும் மொத்தத்தில் 5 சதவீதம் ஜீவராசிக்குதான். மனிதர்கள் பொதுவாக ஒருத்தி, சிலவேளை மற்றொருத்தி என்ற கொள்கையைத்தான் கடை பிடிக்கிறார்கள். இந்த ''சிலவேளை''  மற்றொருத்திக்கு காரணம் ஜீன்களின் புதிய சேர்க்கைகளை முயன்றுபார்த்து அடுத்த தலைமுறைக்கு சிறப்பான தலைமுறைகளை உண்டாக்கும் தேவைதான்.

         HOMOSEX - க்கு ஆதார காரணம் காதல்தான்  என்றாலும் பிறப்பின் போது ஏற்பட்ட சில BIOCHEMICAL TROUBLE தான் காரணம்.

          இயற்கை நம்மை ஒருவகையான நபருக்குத்தான் தயார் செய்து வைத்திருக்கிறது. நம் ஒவ்வொருவர் மனதின் ஆழத்திலும் ஒரு பிரத்யேக நாயகி இருக்கிறார்கள். தனிப்பட்ட காதல் வரைபடம்.  (PERSONAL ROMANTIC NEUROGRAPH) இந்த உருவம் ஆரம்ப காலத்தில் நம் அடிமனதில் உருவாகிறது.

மறக்காமல் ஒட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் செல்வங்களே 

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" - நியாயமான ஒரு கேள்வி


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க-    நியாயமான ஒரு கேள்வி ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டுபந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே ?

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.  
நானும் விவரிக்க ஆரம்பிதேன் வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும் அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

து சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
இந்த மாதிரி அமெரிக்கால்-ல இங்கிலாந்து-ல இருக்குற இல்ல எதாவது கம்பெனி "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

சரி" இந்த மாதிரி >Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants. ...".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும் முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!


      அது 2005-ம் ஆண்டு. வீல்சியாரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல்சியாரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கொம்ப்யூட்டரும், வொய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டோக் ஷோ  நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

      ‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.

பொன்னியின் செல்வனுக்கு கல்கி எழுதிய முடிவுரை


நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றரை ஆண்டு காலம் "பொன்னியின் செல்வன்" கதையைத் தொடர்ந்து படித்து வந்ததில் நேயர்கள் காட்டிய பொறுமையையும் ஆர்வத்தையும், அன்பையும் போற்றி வணங்குகிறேன்.
கதை ஆரம்பித்துச் சில மாதங்கள் வரையில் நேயர்களிடையே இது இவ்வளவு ஆர்வத்தை உண்டாக்குமென்று தோன்றவில்லை. பழந்தமிழ்நாட்டுச் சரித்திரப்பெயர்கள் சிலருக்கு பெரிதும் தலைவேதனையை உண்டாக்கி வந்ததாகத் தெரிந்தது. போகப் போக, அந்தத் தலைவேதனையை நேயர்கள் எப்படியோ போக்கிக் கொண்டார்கள். இதற்கு முன்னால் எந்தத் தொடர் கதையையும் நேயர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் படித்ததில்லை என்று சொல்லும் நிலைமை வெகு விரைவில் ஏற்பட்டது. அதே ஆர்வம் தொடர்ந்து நிலைபெற்று இருந்து வந்தது.
கதை ஆரம்பித்த மறுவருடம் ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் தினத்தில் பரமக்குடியிலிருந்த பல நண்பர்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள். "பொன்னியின் செல்வன்" முதல் அத்தியாயம் பதினெட்டாம் பெருக்குத் திருவிழாவன்று வீர நாராயண ஏரிக் கரையில் தொடங்குகிறது அல்லவா?
பின்னர் அடிக்கடி பல நேயர்கள் கடிதம் எழுதித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தப் பாராட்டுதல்களையெல்லாம் கதையின் ஆசிரியருக்குரியவையாக நான் கருதவில்லை. பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்துக்குரிய பெருமையாகவே கருதினேன். உண்மையிலேயே, தமிழ்நாட்டின் பழைய வரலாறு, தமிழர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளக்கூடிய வரலாறுதான். சென்ற சில ஆண்டுகளாகத்தான் தமிழகத்தின் பழைய சரித்திர ஆராய்ச்சி முறையாக நடைபெற்று வருகிறது. கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் படிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று ஆராய்ச்சியாளர் அந்த ஆதாரங்களை வைத்துத் தமிழகத்தின் சரித்திரத்தை அங்கங்கே பகுதி பகுதியாக நிர்மாணித்து வருகின்றார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...