Pages

Monday, May 9, 2011

"ஐ லவ் யூ...' சொல்லி விட்டேன்.

நான், ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளேன்; நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கின்றனர். நான் ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது, முதலாம் ஆண்டின் ஆரம்பத்திலேயே, ஒரு அழகான பெண்ணை பார்த்து, "ஐ லவ் யூ...' சொல்லி விட்டேன்.
அந்தப் பெண், எனக்கு பக்கத்து வகுப்பு; அவளும், ஆசிரியர் பயிற்சி படித்தாள். அந்தப் பெண், தன் பெற்றோரிடம் பேசும்படி கூறினாள். அதற்கு பிறகு, நாங்கள் பார்த்து கொள்வதுமில்லை; பேசுவதுமில்லை. என்றாவது ஒருநாள் பார்த்தாலும், பழைய நினைவுகள் வரவில்லை. விளையாட்டாக, "ஐ லவ் யூ...' கூறியதாக நினைத்து, சென்று விட்டேன்.
நான் கல்லூரிக்கு அடிக்கடி லீவு எடுப்பேன். இறுதியாண்டு தேர்வு வந்தது. தேர்வின் போது, அந்த பெண், தானாக வந்து என்னிடம் பேசினாள்; என்னை விரும்புவதாக கூறினாள். இரண்டு பேரும், அன்றிலிருந்து மனதார நேசித்தோம். சிறகடித்து வானில் பறந்து கொண்டிருந்தோம். அந்த பெண், என்னை விட வசதியானவள்.
முதலில் என் வீட்டில், என் காதல் பற்றி, அம்மாவிடம் கூறினேன். அம்மா திட்டினார், ஒத்து வராது என்று கூறினார். எனக்கு, அந்த பெண் தான் வேண்டுமென்று என் அம்மாவிடம் கூறினேன். கொஞ்ச நாள் கழித்து, என் காதல் விவகாரம், என் அப்பாவிற்கு தெரிந்து விட்டது; அவர் ஒன்றும் கூறவில்லை. ஏனென்றால், என் அப்பாவும், அம்மாவும் காதல் திருமணம் செய்தவர்கள்.

மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand (10, 9) என டைப் செய்திடவும். இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது என்று பார்க்கவும். 

COM என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

இனி மொபைல்லே பேசும்போ பாத்து பேசுங்கப்பா

      நோக்கியா சிம்பியன் மொபைல்களுக்கான புதிய கால் ரிக்கார்டர் மென்பொருள் வந்துள்ளது. இதில் கால் ரிக்கார்டர் செய்வதோடு மட்டு மல்லாமல் AMR WAV போன்ற ஆடியோ அமைப்புகளில் கால் ரிக்கார்டிங் செய்யலாம். மேலும் SINGLE CLICK செய்வதன் மூலம் நம்முடைய சாதாரண பேச்சுக்களையும் பதிவு செய்யலாம்.
           இதில் BEEP SUPPRESSION TECHNOLOGY பயன்படுத்த படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு PHONE CALL RECORD செய்த உடன் தானாகவே நாம் தேர்வு செய்து வைத்திருக்கும் EMAIL லுக்கு சென்று விடும். 

  தரவிறக்கம் செய்ய CLICK 

இணைய யுகத்தின் பலவீனம்

பேஸ்புக்கே கதி என இருக்கும் பேஸ்புக் பிரியர்கள் இருக்கின்றனர்.சதா யூடியூப்பில் விடியோ காட்சிகளாக பார்த்து கொண்டிருக்கும் யூடியூப் பிரியர்களும் இருக்கின்றனர்.கூகுலின் இமெயில் சேவையான ஜிமெயில் பற்றி சொல்லவே வேண்டாம்.புதிய இமெயில் வந்துள்ளதா என்று பார்க்க கை அடிக்கடி பரபரக்கும்.முதலில் கூகுல்.அதன் பிறகு பேஸ்புக்,யூடியூப்.நடுவே டிவிட்டர்,ஜிமெயில்.
இப்படி தினந்தோறும் விஜயம் செய்யும் இணையதளங்களின் பட்டியல் எல்லோருக்குமே உண்டு.இதில் வரிசை மாறலாம்.ஆனால் தினமும் தவறாமல் செல்லும் இணையதளங்கள் என்று சில நிச்சயமாக இருக்கும்.இவற்றில் சில இணையதளங்களில் மணிக்கணக்கில் செலவிடும் ப‌ழக்கம் சிலருக்கு இருக்கலாம்.
கெட்ட பழக்கம் என்று சொல்லும் அளவுக்கு சிலர் குறிப்பிட்ட அந்த தளங்களுக்கு அடிமையாகி இருப்பதுண்டு.அதாவது அவர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அந்த தளங்களில் அதிக நேரத்தை வீண‌டித்து கொண்டிருப்பார்கள்.

ரூபாய் நோட்டுகளில் 60 மொழிகள் எழுதப்பட வேண்டும்.

அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் ஆட்சி மொழி அந்தஸ்தில் உள்ள முக்கிய மொழிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது 22 மொழிகள் இந்த அட்டவணையில் இடம் பெற்று உள்ளன. 

இன்னும் 38 மொழிகளை 8வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...